சென்னை: ஐகோர்ட் வளாகத்தில் உதவி காவல் ஆய்வாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆஸ்பத்திரியில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சென்னை: ஐகோர்ட் வளாகத்தில் உதவி காவல் ஆய்வாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
உதவி காவல் ஆய்வாளர் சந்திரகாந்தன்
Published on: 

சென்னை,

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் பணியின்போது நடந்து சென்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் உதவி காவல் ஆய்வாளர் சந்திரகாந்தன் ஈடுபட்டிருந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்த அவர், எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு

அவர் மயங்கி விழுந்ததைக் கண்ட சக போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக உயர்நீதிமன்ற வளாகத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் தகவல்

ஆஸ்பத்திரியில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X