சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் பகுதிநேரமாக ரத்து

எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் பகுதிநேரமாக ரத்து
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) மற்றும் வருகிற 25 தேதி மின்சார ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று மற்றும் வருகிற 25 தேதி காலை 10.56, 11.40 மதியம் 12.28 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டில் இருந்து மதியம் 12, 1.10, 1.45 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com