சென்னை புத்தகக்காட்சி இன்றுடன் நிறைவு

இந்த ஆண்டு கட்டுரை நூல்கள், சிறுவர் இலக்கிய புத்தகங்கள் அதிகளவு விற்பனையாகி உள்ளன.
சென்னை புத்தகக்காட்சி இன்றுடன் நிறைவு
Published on

சென்னை,

சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும் புத்தகக்காட்சி மிகவும் புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான சென்னை புத்தகக்காட்சி கடந்த 3-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.

லட்சக்கணக்கான வாசகர்கள் புத்தகக்காட்சிக்கு வந்து ஏராளமான புத்தகங்களை வாங்கி சென்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த ஆண்டு கட்டுரை நூல்கள், சிறுவர் இலக்கிய புத்தகங்கள் அதிகளவு விற்பனையாகி உள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு புத்தகக்காட்சி நிறைவு பெறுகிறது. அதன் பிறகுதான் எத்தனை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்பது தெரியவரும். கடைசி நாள் என்பதால் பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை முடிந்தவரை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com