

சென்னை,
சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை, இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகிறது. இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், நவீன வளர்ச்சியும் கொண்ட நமது அன்புச் சென்னை மாநகருக்கு என் இனிய சென்னை தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையின் பெருமையும், வளர்ச்சியும் மேலும் உயர்ந்து, அனைவரும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.