சென்னை: கோயம்பேடு அருகே ரோடு ரோலர் ஏறி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

மேற்பார்வையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை கோயம்பேடு அருகே மாநகராட்சியால் சாலை பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ரோடு ரோலர் தாறுமாறாக ஓடி ஏறியதில் பாஸ்கர் (54) என்ற மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.
வாகனத்தின் ஓட்டுநர் கவனக்குறைவாக ரோடு ரோலரை இயக்கி, சில அடி தூரத்தில் மாற்றுத்திறனாளி இருப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் அவர் மீது மோதியுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் விரைந்து வந்து அந்த நபருக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில், அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, கண்காணிக்கத் தவறிய மேற்பார்வையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதவி பொறியாளர் வீரராகவனை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story






