தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வாக்களித்த பின் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகள், 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்து ஆர்வமுடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின், தற்போதைய தேர்தல் முக்கியமான தேர்தலாக அமைய போகிறது. ஒட்டு மொத்த வாக்காளர்களும் தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com