சென்னை: சாலையில் நடந்து சென்ற ஐடி ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு


சென்னை: சாலையில் நடந்து சென்ற ஐடி ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு
x

ஐடி ஊழியரிடம் தங்க செயினை பறித்துச்சென்ற சிறுவனை போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை,

சென்னை தனியார் ஐடி நிறுவன ஊழியரான ராம்பிரசாத் அரும்பாக்கம் மெட்ரோ நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ராம் பிரசாத் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து ராம் பிரசாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், ராம் பிரசாத்திடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது மேற்கு அண்ணாநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைதுசெய்த போலீசார், அவனிடமிருந்து செயினை பறிமுதல் செய்தனர். சிறுவனின் கூட்டாளியான சரவணன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

1 More update

Next Story