கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷசாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டவர்கள் செத்தனர். இந்த மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில்தான் சாராயம் தயாரித்து, விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, இந்த விஷசாராய சாவு தொடர்பான வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயமாக இருக்காது. அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு வழங்கியுள்ளது.

1 More update

Next Story