சென்னை: மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற கணவர் கைது

சென்னை பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
சென்னை: மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற கணவர் கைது
Published on

சென்னை,

சென்னை பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 38). இவரது கணவர் ராபர்ட்(38). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பூங்கொடி, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் பூங்கொடி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த ராபர்ட், பூங்கொடியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

திடீரென ராபர்ட் கத்தியால் பூங்கொடியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த பூங்கொடி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து ராபர்ட் கைது செய்யப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com