சென்னை மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு

இன்று காலை முதல் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள், க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
Published on

சென்னை:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ க்யூஆர் ஆன்லைன் டிக்கெட் சேவைகள் தற்காலிகமாக செயல்படவில்லை என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே, பயணிகள் சி.எம்.ஆர்.எல். மொபைல் செயலி, வாட்ஸ்அப், போன்-பே மூலம் டிக்கெட்களை பெறலாம். மேலும் மெட்ரோ ரெயில் பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்று காலை முதல் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com