சென்னை போலீஸ் அலுவலக ஊழியர் தற்கொலை

சென்னை போலீஸ் அலுவலக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை போலீஸ் அலுவலக ஊழியர் தற்கொலை
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 45). இவர், திம்மாவரத்தில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர், சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை போலீஸ் தலைமை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.

செங்கல்பட்டு அருகே தனது குடும்பத்துடன் வசித்து வந்த சுந்தர்ராஜன் கடந்த ஒருவாரமாக குடும்பத்தில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

நேற்று முன்தினம் நள்ளிரவில் சுந்தர்ராஜன் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், தற்கொலை செய்த சுந்தர்ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜனின் தற்காலைக்கான காரணம் குறித்து அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com