சென்னை: சொகுசு காரில் ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

சென்னையில் காவல் நிலையத்தின் பின்புறம் நின்றிருந்த காரில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: சொகுசு காரில் ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை
Published on

சென்னை,

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் நின்றிருந்த காரில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள ராஜகோபால் தெரு பகுதியில் சொகுசு கார் ஒன்று நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி வழியாக சென்றவர்கள் இன்று போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வளசரவாக்கம் போலீசார் காரை திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் இறந்து 10 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com