தொழில்நுட்பக் கோளாறால் சென்னை- சேலம் விமானம் தாமதம்: பயணிகள் அவதி

தொழில் நுட்ப கோளாறு காரணமாக சேலம்-சென்னை விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறால் சென்னை- சேலம் விமானம் தாமதம்: பயணிகள் அவதி
Published on

சேலம்,

சேலத்தில் இருந்து சென்னைக்கு இன்டிகோ விமானம் இயக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த விமானம் தினமும் சேலத்தில் மதியம் 3.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதன்படி நேற்று இந்த விமானத்தில் சேலத்தில் இருந்து சென்னை செல்ல சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி உள்ளிட்ட 74 பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.நேற்று மதியம் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறினர். விமானம் 3.40 மணிக்கு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டு பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு அந்த விமானம் 2 மணி நேரம் தாமதமாக மாலை 5.40 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். இது குறித்து விமான நிலைய அதிகாரியிடம் கேட்ட போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையொட்டி முன்பதிவு செய்திருந்த 74 பேரில் 59 பயணிகள் மட்டுமே நேற்று விமானத்தில் சென்னைக்கு சென்றனர். 15 பேர் அந்த விமானத்தில் செல்ல வில்லை என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com