சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
Published on

சென்னை,

சென்னையில் இருந்து 65 பயணிகள், 5 சிப்பந்திகள் என 70 பேருடன் இன்று காலை 10.10 மணிக்கு தூத்துக்குடிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. விமானம் டேக் ஆப் ஆக தயாரான போது, தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் இழுவை வாகனம் மூலமாக விமானம் நிறுத்தி வைக்கப்படும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து விமானத்தில் கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானம் தாமதமாக புறப்படும் என விமான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒருவேளை கோளாறை சீர் செய்ய முடியவில்லை என்றால் மாற்று விமானம் மூலமாக பயணிகள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழில்நுட்பக் கோளாறு தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டதால், 70 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். கடந்த சில தினங்களாக விமானங்களில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com