சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ரத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ரத்து
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம் பணிமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தண்டவாளம் சீரமைப்பு பணி காரணமாக சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற ஜூன் 19,21 ஆகிய தேதிகளில் மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.16053), மறுமார்க்கமாக, திருப்பதியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16054) ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற ஜூன் 19-ந்தேதி மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16203), மறுமார்க்கமாக, திருப்பதியில் இருந்து மேற்கண்ட தேதியில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16204) ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற ஜூன் 21-ந்தேதி காலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16057) ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com