சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு

காய்கறிகளின் விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு
Published on

சென்னை,

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கர்நாடக மாநிலம் கோலார், பெங்களூரு மற்றும் ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறிகறிகளின் வரத்து அதிகரித்ததால் அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 1 கிலோ வெங்காயம் 22 ரூபாயக்கும். தக்காளி 7 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முருங்கைகாய் 40 ரூபாய்க்கும். வெண்டைக்காய் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com