சென்னையில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்ய அக். 10, 11- ல் சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்களில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நாளை சனிக்கிழமை (10.10.2026) மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்து 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.

எனவே, வாக்காளர் பட்டியலில், இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை தகுதி பெறும் வாக்காளர்கள், உரிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமினை அணுகி, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com