கோழி இறைச்சி விற்பனையாளர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ்

தீவன கட்டுப்பாட்டை கடைபிடிப்பதாக உற்பத்தியாளர்கள் கொடுத்த உறுதியை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி விற்பனையாளர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ்
Published on

சென்னை,

விற்பனைக்கு அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தது 15 மணிநேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்குவதை உற்பத்தியாளர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வலியுறுத்தி, இதனை அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகள் மூலம் அரசு அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

ஆனால் வணிகர்களின் கோரிக்கை ஏற்க மறுக்கப்பட்டதாக கூறி, நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்தன. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்திய தீவன கட்டுப்பாட்டை கடைபிடிப்பதாக உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த உத்தரவாதத்தை அடுத்து, நாளை முதல் நடைபெற இருந்த பிராய்லர் கறிக்கோழி விற்பனையாளர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தீவன கட்டுப்பாட்டை கடைபிடிப்பதாக உற்பத்தியாளர்கள் கொடுத்த உறுதியை அடுத்து கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கறிக்கோழி விற்பனையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com