சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று விடுமுறை...!

தொடர் மழைக் காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று விடுமுறை...!
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை , கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் மழைக் காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மட்டு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும் என பதிவாளர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com