முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது புதிய தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் வழங்க முடிவு எடுக்கப்படும்?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் புதிய தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது புதிய தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் வழங்க முடிவு எடுக்கப்படும்?
Published on

சென்னை,

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதிகளில் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு முழுவீச்சில் செய்து வருகிறது.இந்த மாநாட்டுக்கு பின்னர் தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com