அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்-அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்: ஜவாஹிருல்லா பேட்டி

முதல்-அமைச்சர் விஜய் வரம்பை மீறி பேசியுள்ளதாக ஜவாஹிருல்லா கூறினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்-அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்: ஜவாஹிருல்லா பேட்டி
Published on

சென்னை,

காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக ஊழல்கள் செய்ததாக அமலாக்கத்துறை கூறியதாக ஆதாரத்துடன் பேசினார். இதையடுத்து, இதற்கு பதில் கூற சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதால் திமுகவினருடன் சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சியும் வெளிநடப்பு செய்தது.

இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோதும் எதிர்கட்சியை விமர்சிப்பார்கள். அதெல்லம் வரம்பை மீறி இருக்காது. ஆனால் இன்று முதல்-அமைச்சர் விஜய் வரம்பை மீறி பேசியுள்ளார். காவல்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரை அல்ல இது. உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை, கொள்கை விளக்க குறிப்பில் உள்ளவற்றை விளக்கமாக சொல்வது தான் பதிலுரை. அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்-அமைச்சர் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்.” இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com