

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கடந்த மே மாதம் 10-ந் தேதி பதவியேற்றுக் கொண்டார். அதன்பின்னர், ஒவ்வொரு நாளும் அரசு அலுவலர்கள் பணிக்கு வருவதுபோல், காலையிலேயே தலைமைச் செயலகம் வந்து மாலை வரை பணியாற்றி வருகிறார். மதிய உணவையும் தன்னுடன் எடுத்துவந்து சாப்பிடுகிறார்.
இதுவரை இருந்த முதல்-அமைச்சர்கள் எல்லாம் வெள்ளைநிற வேட்டி - சட்டையில் தலைமைச்செயலகம் வந்து சென்றுள்ளனர். ஆனால், இவர் திரைத்துறையில் இருந்து வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான ஆடைகள் அணிந்து வருகிறார்.
குறிப்பாக, கோட்-சூட்டுடன் வரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி-சட்டையில் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், இன்று தலைமைச் செயலகம் வந்த அவர் பட்டு வேட்டி-சட்டையிலேயே வந்திருந்தார். அவரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள்.