செவாலியே விருது பெறவுள்ள 'காலச்சுவடு' எஸ்.ஆர்.சுந்தரத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

செவாலியே விருது பெற தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் 'காலச்சுவடு' எஸ்.ஆர்.சுந்தரத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செவாலியே விருது பெறவுள்ள 'காலச்சுவடு' எஸ்.ஆர்.சுந்தரத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

பதிப்புத்துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெற பதிப்பாசிரியர் 'காலச்சுவடு' கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் தேர்வாகியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பதிப்புத்துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் 'காலச்சுவடு' கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com