முதல்வர் மருந்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

முதல்வர் மருந்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் மருந்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
Published on

தஞ்சாவூர்,

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் வருகை தந்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மருந்துகளின் இருப்பு நிலை, வழங்கும் நடைமுறை, மற்றும் பொதுமக்கள் வருகை குறித்து பணியாளர்களிடம் நேரடியாக விவரங்களை கேட்டறிந்தார். மக்கள் நலன் கருதி குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகம் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவையின் தரம் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.

இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அதன் மூலம் மருத்துவச் செலவுகள் கணிசமாக குறைத்துவருவதாகவும், அந்த மருந்தகம் பணியாளர் முதல்-அமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com