பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எச். ராஜாவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எச்.ராஜா, மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

Also Read
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மூலம் நன்கு குணமடைந்து வருகிறார். அவர், தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடி வருகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் உடல்நலம் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

Also Read
உருப்படியான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத மக்கள் விரோத பட்ஜெட் - செல்வப்பெருந்தகை
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று குடும்பத்தினரிடம் முதல்-அமைச்சர் விருப்பம் தெரிவித்தார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்று நலம் விசாரித்தார்.

Also Read
நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் - ராமதாஸ்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com