கன்னியாகுமரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: நெல்லை மாநகரில் டிரோன்கள் பறக்க தடை

கன்னியாகுமரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: நெல்லை மாநகரில் டிரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று தூத்துக்குடி விமான நிலையம் வருகை தர உள்ளார்.
Published on

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (24.2.2026), நாளை (25.2.2026) என 2 நாட்கள் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்ேவறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகை தர உள்ளார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (24.2.2026) காலை 6 முதல் நாளை (25.2.2026) மாலை 6 மணி வரை திருநெல்வேலி மாநகர காவல் எல்லையில் டிரோன்கள் (Drone) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other unmanned aerial vehicles) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

இதனை மீறும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com