6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி

வரும் 17ம் தேதி 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தூத்துக்குடியில் தொடங்குகிறார்.
6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 'வெற்றி நடைபோடுகிறது தமிழகம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்து 5-வது கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்த வகையில் வரும் 17ம் தேதி 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தூத்துக்குடியில் தொடங்குகிறார். இதன்படி வரும் 18, 19ம் தேதிகளில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com