ஆய்வு மேற்கொண்ட விடுதியில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் விஜய்

மாணவர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்ற அதி​காரி​களுக்கு முதல்-அமைச்சர் உத்தர​விட்​டார்.
ஆய்வு மேற்கொண்ட விடுதியில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

சென்​னை, சைதாப்​பேட்​டை​யில் உள்ள எம்​.சி. ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் நேற்​று ​முன்​தினம் முதல்​-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார். மேலும், மாணவர்​களிடம் குறை​கள் மற்​றும் தேவை​களை கேட்டறிந்​தார். அப்​போது, விடு​தி​யில் இருக்​கும் குறை​கள் மற்​றும் தேவை​களை முதல்-அமைச்சரிடம் வேதனை​யுடன் மாணவர்​கள் எடுத்துரைத்​தனர்.

குறிப்​பாக, உடற்​கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்​டும். நவீன உடற்​ப​யிற்சி கூடம் அமைக்க வேண்​டும். உணவின் தரத்தை மேம்​படுத்த வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகள் அடங்​கிய மனுக்​களை​யும் முதல்-அமைச்சரிடம் மாணவர்கள் வழங்​கினர். மாணவர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும் என அமைச்​சர் மற்​றும் அதி​காரி​களுக்கு முதல்-அமைச்சர் உத்தர​விட்​டார்.

இதையடுத்​து, பல மாற்​றங்​கள் விடு​தி​யில் செய்யப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. இதுகுறித்​து, சமூகநீ​தித் துறை​யின் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறுகையில், மாணவர்​களுக்கு தரமான உணவு வழங்​கும் வகை​யில் விடு​தி​யின் உணவுப் பட்​டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்​ளது. இட்​லி, சப்​பாத்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்​ளது.

மாணவர்​களுக்கு தரமான உணவு வழங்​கப்​படு​வதை உறுதி செய்ய கண்​காணிப்பு குழு​வும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், மூடப்​பட்​டிருந்த வாலி​பால் மைதானம் மாணவர்​கள் பயன்​படுத்த திறக்​கப்​பட்​டுள்​ளது. மாணவர்​கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் கூறி​னார். முதல்​-அமைச்சர் விஜய்​யின் ஆய்​வுக்கு அடுத்த நாளே மாணவர்​கள் முன்​வைத்த கோரிக்​கை​களில் சில​வற்​றுக்கு உடனடி தீர்வு காணப்​பட்​டிருப்​பது, மாணவர்​களிடையே வரவேற்​பை பெற்றுள்​ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com