மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய் - கனிமொழி தாக்கு

மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி.
கோப்புப்படம்
Published on

சென்னை,

மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.

முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்.

முதல்-அமைச்சருக்கு காவல்துறையை கையாளத் திறனில்லை என்றால், அதைத் திறம்பட கையாளக்கூடிய வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போகட்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com