முதல்- அமைச்சர் விஜய் நேர்மையாக அரசை நடத்துகிறார்: மதுரையில் வைகோ பேட்டி

தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு தி.மு.க. தான் எனவும், முதல்- அமைச்சர் விஜய் நேர்மையாக அரசை நடத்துகிறார் என மதுரையில் வைகோ கூறினார்.
வைகோ
Published on: 

மதுரை, -

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஓட்டலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்- அமைச்சர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் கிடையாது. ஆனால், நேர்மையாக ஆட்சி நடத்துகிறார். அரசை எதிர்த்து முன்பு ஆண்ட கட்சியினர் பலரும் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். தரம் குறைந்த வகையிலும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், நேர்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என்ற ஒன்றை இலக்குடன் முதல்- அமைச்சர் பயணிக்கிறார். அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடையாது. இருந்தாலும் நேர்மையாக ஆட்சியை நடத்துகிறார். இதனை யாராலும் மறுக்க முடியாது.

பழைய அரசுகளை எளிமையாக அணுகிய ஸ்டெர்லைட் முதலாளியால், தற்போது வரை விஜய்யை சந்திக்க முடியவில்லை. நேர்மையான ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்.பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று வந்தேன். கடந்த காலங்களில் கப்பம் கட்டினால் தான் வேலை நடக்கும். ஆனால், இப்போது அப்படி இல்லை.த.வெ.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடக்கிறது என்கிறார்கள். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன.

இதுபோல் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொடூரமான கொலைகள், கொள்ளைகள் நடைபெற்றது.தி.மு.க.வை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். முன்பு சில பேர் சிமெண்ட் ரோடு போட்டு கரும்புத் தோட்டத்தில் நடக்கவில்லையா ?. மக்கள் தெளிவாக இருந்ததால், த.வெ.க.வுக்கு வாக்களித்துள்ளார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com