மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாளை மறுநாள் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

முதல்​-அமைச்சரை வரவேற்​கும் வகை​யில், கோவில் நிர்​வாகம், காவல்துறை சார்​பில் ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாளை மறுநாள் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்
Published on: 

மதுரை,

நாளை மறுநாள் (திங்கள் கிழமை) மதுரைக்கு வருகை தரும் தமிழக முதல்​-அமைச்சர் விஜய், மீனாட்சி அம்​மன் கோவிலுக்​குச் செல்ல திட்​ட​மிட்​டுள்​ள​தால், பாது​காப்பு ஏற்​பாடு​களை போலீ​சார் தீவிரப்​படுத்தி வரு​கின்​றனர்.

தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டம்

உலகப் புகழ்​பெற்ற மதுரை மீனாட்சி அம்​மன் கோவிலில் 17 ஆண்டு​களுக்​குப் பின்பு கடந்த 17-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்று சாமி தரிசனம் செய்​தனர். இதனைத்தொடர்ந்து செப்​.18 முதல் அக்.2-ம் தேதி வரை மண்டல பூஜைகள் நடந்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், அரசு மருத்​து​வமனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்​கான ‘தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டம்’ தொடக்க விழா செப்​. 28-ம் தேதி உசிலம்​பட்​டி​யில் நடை​பெறு​வ​தாக இருந்தது. திடீரென இடம்மாற்​றப்​பட்​டு, மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் அதே தேதி​யில் நடை​பெறுகிறது.

மீனாட்சி அம்​மன் கோவில்

இதன் காரண​மாக, மதுரைக்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் விஜய், மீனாட்சி அம்​மன் கோவி​லிலும் தரிசனம் செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக அரசு வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்​-அமைச்சரை வரவேற்​கும் வகை​யில், கோவில் நிர்​வாகம், காவல்துறை சார்​பில் ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.

முதன்​முறை​யாக மதுரைக்கு

முதல்​-அமைச்சரான பிறகு விஜய் முதன்​முறை​யாக மதுரைக்கு வரு​வ​தால், விமான நிலை​யத்​தில் இருந்து அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை வரை முதல்​-அமைச்சர் வரும் வழித்​தடம் உள்​ளிட்ட நகருக்​குள் அளிக்​கும் பாது​காப்பு குறித்​து, காவல்​துறை அதி​காரி​கள் ஆலோ​சித்து வரு​கின்​றனர். மேலும் அவர், மீனாட்சி அம்​மன் கோவிலிலும் தரிசனம் செய்​வ​தால், பாது​காப்பு ஏற்​பாடு​களை தயார் நிலை​யில் வைக்க உள்​ளூர், வெளியூர்​களில் இருந்து போலீ​சாரை வரவழைக்க திட்​ட​மிட்​டுள்​ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே முதல்-அமைச்சரை வரவேற்கும் வகையில் ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகின்றன. மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கப்பட்டு, புதிய தார்ச் சாலைகள் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சரின் வருகையையொட்டி பெருந்திரளான பொதுமக்களும், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாலை 4.30 மணிக்கு

மதுரை செல்லும் முதல்-அமைச்சர் விஜய், பகல் 12.30 மணிக்கு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் பகல் 1 மணிக்கு புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் மாலை 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com