முதல்-அமைச்சர் விஜய்யுடன் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் முதல்-அமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து பேசினார்.
முதல்-அமைச்சர் விஜய்யுடன் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுதர்ஷன் வேணு சந்தித்து பேசினார்.

இதேபோல், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து பேசினார்கள்.

மேலும், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கட சுப்பு, கவுரவத் தலைவர்கள் டி.ஸ்ரீனிவாசன், கே.டி.ஸ்ரீனிவாச ராஜூ, சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் ரவி, துணைத் தலைவர் வாஞ்சி முத்து மற்றும் நிர்வாகிகளும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து பேசினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com