

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-
“மேகதாதுவில் கர்நாடக அரசு ஒருபோதும் அணை கட்ட முடியாது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளையும் அழைத்து முதல்-அமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை, தமிழகத்தில் தற்போது த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.