

சென்னை,
எங்கு அரசியல் ஆதாயம் அதிகம் கிடைக்கிறதோ, அங்கு சென்று விடும் நம்ப கத்தன்மையற்ற காங்கிரஸ் கட்சியிடம் முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் ராம்மாதவ் கூறினார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
சென்னை தியாகராயநகர் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மேலிட பொறுப்பாளர் ராம்மாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர். குறித்து காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறனர்
இந்தியாவின் ஜனநாயக அமைப்பும், தேர்தல் முறையும் மிகச் சரியானவை, குறை சொல்ல முடியாதவை. இதற்கு வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கு தமிழ்நாடே இதற்குச் சாட்சி.அதே தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் நடந்த அந்தத் தேர்தலில் என்ன நடந்தது?. எங்களால் ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. ஆனால் ஒரு புதிய கட்சி (த.வெ.க.) ஆட்சிக்கு வந்தது. நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் கட்சிகளால் (தி.மு.க., அ.தி.மு.க.) கூட வெற்றி பெற முடிய வில்லை.
இப்போது, அந்தப் புதிய கட்சி வெற்றி பெற்றதற்குத் தேர்தல் ஆணையம் தான் காரணம் என்று தி.மு.க. குற்றம் சாட்டினால், அது மிகவும் அபத்தமானது. அதாவது, தாங்கள் வெற்றி பெற்றால் அது உண்மையான தேர்தல், பா.ஜனதா வெற்றி பெற்றால் அது மோசடியான தேர்தல் என்று காங்கிரஸ் தரப்பு பிரசாரம் செய்கிறது.
இது காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. இது தமிழக வாக் காளர்களை அவமதிப்பதாகும்.
காங்கிரஸ் போன்ற கட்சியை நம்பி அரசியல் செய்வது எவ்வளவு முட்டாள்தன மானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் நம்பகத்தன்மையற்ற கட்சி என்பதை மு.க.ஸ்டாலின், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் உணர்ந்திருப்பார்.
அதேபோல், முதல்-அமைச்சர் விஜய்யும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் எங்கு அரசியல் ஆதாயம் அதிகம் கிடைக்கிறதோ அங்கு உடனடியாக காங்கிரஸ் சென்று விடும்.இவ்வாறு அவர் கூறினார்.