

சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் மாணவச் செல்வங்களுக்கு என் அன்பிற்குரிய மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.