அமைச்சர் வன்னி அரசை பாராட்டிய முதல்-அமைச்சர் விஜய் - எதற்கு தெரியுமா...?

முதல்-அமைச்சர் விஜய் பதில் சொல்வதை விட செயலில் காட்டுகிறார் என்று அமைச்சர் வன்னி அரசு கூறினார்.
அமைச்சர் வன்னி அரசை பாராட்டிய முதல்-அமைச்சர் விஜய் - எதற்கு தெரியுமா...?
Published on

சென்னை,

அமைச்சர் வன்னி அரசை முதல்-அமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார்.

சோபா மாடல்

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நேர்காணலில் அமைச்சர் வன்னி அரசு, சோபா மாடல் குறித்து விளக்கம் ஒன்றையும் கொடுத்தார். அதில் தவெக அரசு சோபா மாடல் அரசுதான், S-Social Justice, O-Organised Action, F-Freedom, A-Anti Corruption & Caste என விளக்கம் கொடுத்தார். மேலும், முதல்-அமைச்சர் விஜய் பதில் சொல்வதை விட செயலில் காட்டுகிறார் என்று கூறினார்.

முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு

இந்த நிலையில், அமைச்சர் வன்னி அரசை முதல்-அமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார். இதுகுறித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்யை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன். அப்போது முதல்-அமைச்சர் விஜய் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும், அதில் சோபா மாடல் (SOFA MODEL) ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com