

சென்னை,
தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்கள், தவெக தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் சிறப்பு பூஜைகள், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் விஜய் தனது தாய், தந்தையிடம் ஆசிபெற்றார். தலைமை செயலகத்திற்கு வந்த தாய் சோபா, தந்தை சந்திர சேகரிடம் முதல்-அமைச்சர் விஜய் ஆசிபெற்றார்.