முதல்-அமைச்சர் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; மிக்க மகிழ்ச்சி - ப.சிதம்பரம்

இரு மொழிக்கொள்கை ஏட்டளவில் மட்டும் இருக்கக்கூடாது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; மிக்க மகிழ்ச்சி - ப.சிதம்பரம்
Published on: 

சென்னை,

மத்திய அரசு மூலம் தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது முதல்-அமைச்சர் விஜய் ஆங்கிலத்தில் பேசினார்.

அவர் கூறுகையில், தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு முன்னேற்றத்துக்கு எப்போதும் அடித்தளமாக இருந்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக செயல்படும்போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகு முறை என்று பேசினார்.

இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சர் விஜய்யின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக் கேட்டேன் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி.

இருமொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள் எல்லோரும், குறிப்பாக இளம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளையும் சரளமாகப் பேசவேண்டும், உச்சரிக்க வேண்டும் என்பது என் விருப்பம். எல்லாப் பள்ளிகளிலும் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களை மற்றும் ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இரு மொழிக் கொள்கை ஏட்டளவில் மட்டும் இருக்கக் கூடாது. தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com