

சென்னை,
தவெக அரசின் முதல் பட்ஜெட் ஜூலை மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதிகளாக கருதப்படும் பெண்களுக்கு ரூ.2,500 மகளிர் உரிமை தொகை, தாய் மாமன் தங்க மோதிர திட்டம், மாநிலம் முழுக்க இலவச பேருந்து திட்டம், இலவச சிலிண்டர் என பல்வேறு வாக்குறுதிகளை தவெக அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த சூழலில், தவெக அரசின் முதல் பட்ஜெட் ஜூலை மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழக பட்ஜெட் குறித்த எதிர்பார்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய், பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக ஜூலை 2ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துறையின் அமைச்சர்கள்,செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். நிதிநிலை அறிக்கையில் இடம்பெறக்கூடிய திட்டங்கள் மற்றும் அதற்கு தேவையான நிதி தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.