

சென்னை,
சென்னை மக்களுக்கு ஏரிகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள்,கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றில் இருந்து 84 குடிநீர் வினியோக நிலையங்களில் இருந்தும் பிரதான குழாய்கள் மூலம் 120 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வகை வழிவகை செய்யும் வகையில் தனித்தனியாக அதற்கான குழாய்கள் அமைக்கும் பணிக்கு இன்று முதல்- அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டியுள்ளார்.
சுற்றுக்குழாய் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த பிறகு தற்பொழுது நடந்து சென்று அங்கு இருக்கக்கூடிய மக்களுடைய அன்பை பெற்றார். குறிப்பாக, அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான ஐடி ஊழியர்களை முதல்-அமைச்சரை சூழ்ந்து கொண்டு தங்களின் உற்சாகமான வரவேற்பை முதல்-அமைச்சருக்கு வழங்கினார்.
இந்த பகுதி முழுக்க முழுக்க ஐடி நிறுவனங்கள் நிறைந்திருக்கக்கூடிய பகுதி; இன்போசிஸ் நிறுவனமும் இங்கு இருக்கிறது. முதல்-அமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்த கட்டடத்திற்கு எதிர்புறமே நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொண்ட நிறுவனம் இன்போசிஸ் உள்ளது. இந்த சோழிங்கநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதி என்பது முழுமையாக ஐடி ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடிய பகுதி, இந்நிலையில்தான் முதல்-அமைச்சர் முதன்முறையாக இப்பகுதிக்கு வந்திருக்கிறார்.
எனவே, முதல்-மைச்சர் வருகை தரும் செய்தியறிந்து, தற்போது ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த பணியாளர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கில் வெளியே ஓடிவந்து முதல-அமைச்சரை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். வழக்கத்தை காட்டிலும் இன்று முதல்-அமைச்சர் நீண்ட தூரம் நடந்து சென்றார், ஏன் என்றால் இளைஞர்கள் தான் அதிக அளவில் நின்று கொண்டிருந்தனர்.
அனைவருமே தங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டையுடன் நின்று கொண்டு இருந்தனர். இந்த நிலையில் முதலமைச்சரிடம், 'இப்பகுதியில் அதிக அளவில் ஐடி ஊழியர்கள் இருக்கிறார்கள்' என்று அமைச்சர்கள் எல்லோரும் தகவல் சொல்லியிருந்த நிலையில்தான், அவர்களுக்கு முன் நடந்து சென்று அவர்களின் அன்பை பெற்றார். பொதுவாக மக்களை காண முதல்-அமைச்சர் நடந்து செல்வது வழக்கம்; ஆனால், இங்கு வழக்கத்தை விட நீண்ட தூரம் நடந்து சென்றார்."