

சென்னை,
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, நீண்ட இழுபறிக்கு பின்னர், தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை நிருபர்களிடம் முடிந்துவிட்டது என்பதை செய்கை மூலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டினார். இந்த நிலையில் அதே செய்கையை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் செய்து காண்பித்தார். இதற்கு அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ‘சட்டசபையில் நடந்தது எதுவும் அவை மீறல் அல்ல’ என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கண்ணாதாசன் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயர்நகரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அவரிடம், இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்