முதல்-அமைச்சர் விஜய் பாதுகாப்பு பணி; சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 11 காவலர்கள் மயக்கம்

மதிய உணவாக பட்டாலியன் கம்பெனி உணவகத்திலிருந்து, சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
முதல்-அமைச்சர் விஜய் பாதுகாப்பு பணி; சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 11 காவலர்கள் மயக்கம்
Published on

சென்னை,

கிழக்கு கடற்கரை சாலையில், முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி பரபரப்பானது. முதல்-அமைச்சர் விஜய் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், பாதுகாப்பு பணிக்காக, 53 போலீசார் நேற்று, பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு, மதிய உணவாக பட்டாலியன் கம்பெனி உணவகத்திலிருந்து, சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

வாந்தி, மயக்கம்

அதை சாப்பிட்ட நிலையில், 11 போலீஸ் காரர்களுக்கு திடீரென தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திருவான்மியூர் மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர். முதற்கட்ட விசாரணையில் அந்த உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com