வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம்

வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடைபெற்றது.
வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம்
Published on

வாணாபுரம்

வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடைபெற்றது.

வாணாபுரம் அருகே உள்ள வரகூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிடாரி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதம் அமாவாசை தினத்தில் மிளகாய் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பக்தர்கள் கொண்டு வந்திருந்த மிளகாய்கள் மற்றும் நவதானியங்கள் பழங்களால் யாகம் வளர்க்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையொட்டி கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com