திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..!
Published on

சென்னை,

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறதுதர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த நிலையில், ஏழாம் நாள் திருவிழாவான இன்று சித்திரை திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கோவிந்தா.... கோவிந்தா... என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் இழுத்து வருகின்றனர். செல்லும் வழியெல்லாம் தேரின் சக்கரத்துக்கு அடியில் உப்பு வைத்து வழிபடுகின்றனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேருக்கு முன்பு நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு திவ்ய பிரபந்தம் பாடி செல்கின்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com