திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் நாளை மறுநாள் நடக்கிறது..!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் வரும் 10-ந்தேதி நடக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 13-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 6-ந்தேதி கருட சேவை- கோபுரவாசல் தரிசனம், ஏகாந்த சேவை, அம்சவாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு அனுமந்த வாகனம் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) காலை நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருளல், காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து வருகிற 12-ந்தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரியும், அன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com