சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை உடனடியாக மாற்றக்கேரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் வினேத் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ராமன், குன்னூர் தாலுகா செயலாளர் இளங்கே, தலைவர் கண்ணன், விவசாய சங்க தலைவர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com