பாவாணர் நூலக அரங்கில் கருணாநிதி புகைப்படம் அகற்றம் என பரவும் தகவல் - சரிபார்ப்பகம் மறுப்பு

நூலக அரங்கில் கருணாநிதி புகைப்படம் திடீரென அகற்றப்பட்டதாகச் செய்திகள் பரவி வருகின்றன.
பாவாணர் நூலக அரங்கில் கருணாநிதி புகைப்படம் அகற்றம் என பரவும்  தகவல் - சரிபார்ப்பகம் மறுப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கலைஞர் கருணாநிதி புகைப்படம் அகற்றம் என்று பரவும் தவறான தகவல்

பரவும் செய்தி

சென்னை அண்ணா சாலையில் உள்ள பாவாணர் நூலக அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தேவநேயப் முன்னாள் புகைப்படம் திடீரென அகற்றப்பட்டதாகச் செய்திகள் பரவி வருகின்றன.

உண்மை என்ன?

இது தவறான தகவலாகும்.

இது குறித்து சென்னை மாவட்ட நூலக அலுவலர் அளித்துள்ள விளக்கத்தில், "08.04.2026 அன்று தேவநேயப் பாவாணர் அரங்கத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சாதனப் பெட்டி தீப்பிடித்து எரிந்தது.

இதனால் ஒப்பனைக் கூரை, எச்சரிக்கை மணி மற்றும் புகைப்படங்கள் அகற்றப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்த பின்னர் கழற்றி வைக்கப்பட்ட புகைப்படங்கள் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டன." என்று குறிப்பிட்டுள்ளார்.

தவறான தகவலைப் பரப்பாதீர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com