நாமக்கல்லில் 2 வடமாநில இளைஞர்கள் படுகொலை

நாமக்கல்லில் 2 வடமாநில இளைஞர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லில் 2 வடமாநில இளைஞர்கள் படுகொலை
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே வடமாநில இளைஞர்கள் இருவரின் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரின் உடல்களை கண்ட அப்பகுதியினர், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா மற்றும் துகிலேஷ் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்துள்ளனர். எதற்காக இந்த படுகொலை நடைபெற்றது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com