குடியரசு தினத்தையொட்டிமயானத்தை சுத்தம் செய்த சாலை பணியாளர்கள்

குடியரசு தினத்தையொட்டிமயானத்தை சுத்தம் செய்த சாலை பணியாளர்கள்
Published on

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாநரங்களின் தூய்மைக்கான மாபெரும் மக்கள் இயக்கப் பணியில் சாலைப்பணியாளர்கள் ஒவ்வொரு விடுமுறை நாளிலும், ஒவ்வொரு பகுதியில் மக்கள் சேவைக்கான தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று குடியரசு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட சாலைப் பணியாளர்கள் பெரியமுத்தூர் ஊராட்சி, அவதானப்பட்டி பொது மயானத்தை சுத்தம் செய்திடும் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

இதில் சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகராஜா, மாநில துணைப் பொதுச்செயலாளர் பெருமாள், மாநில செயலாளர்கள் ரவி, ராஜமாணிக்கம், மாநில துணைத் தலைவர்கள் சின்னராசு, ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் சந்திரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com