தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணிகள்; நெல்லை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

மாணவர்கள், தன்னார்வலர்களை இணைத்து ஏன் தூய்மை பணிகளை மேற்கொள்ளக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணிகள்; நெல்லை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
Published on

மதுரை,

தாமிரபரணி ஆற்றில் குப்பைகளை கொட்டுவோர் மீது ஏன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவர்கள், தன்னார்வலர்களை இணைத்து ஏன் தூய்மை பணிகளை மேற்கொள்ளக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஆற்றை சுத்தப்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நெல்லை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com